Wednesday, August 3, 2016

தமிழ் மாறனின் மகன்

வெட்டு உடைந்த தேகம்
உன் அரிவாள் தீண்டி படர
விழுந்தது நானா இல்லை என்னை கருத்தரித்த என் தகப்பனா

கபாலி....
வென்றது நீயும் இல்லை
தோற்றது என் தகப்பனும் அல்ல...
வீழ்ந்தது நான் மட்டுமே...

துரோகி அவன் என்றால்...
நண்பன் அவன் இல்லையா....
பித்தம் யாருக்குதான் தலைகேறவில்லை...
நீ கபாலி தானே...
அறியாதது உன் தவறடா.. மடையா

அரக்கனான அப்பனை நினைக்கமுடியாதடா..
கிறுக்கனாய் தான் அவன் சரிந்து போனானடா....
உன் கால் பங்கு வயதான எனக்கு தெரிந்தது உனக்கு எட்டவில்லையா...

ஏனடா  மாரில் சாய்த்ததை..
சிறிதாய் கனிந்து...
அவன் காலில் சாய்த்திருந்தால்.....
தவறறிந்து உனக்கு ஏழுஜென்மத்து அடிமையாய் தொழுதிருப்பானே..
என் விதியயை இப்படி எரித்தும் புதைத்தும் சிதைத்திருப்பாயா...

நான் துரோகியின் மகனாய் புதைந்தாலும்
உன் சிரிப்பில் நான் பாவம்  மட்டுமே காண்பெண்...
உன் துயரத்தில் என் சாபம் மட்டுமே காண்பெண்...
கபாலி மறந்துவிடாதே நான் தமிழ்மாறனின் மகன்...

என்  அப்பன்  உன்னை  கோபித்து  என்ன  பயன்
தாபித்து  போனது  நான்  தானே ...
உன்னை  வெறுக்க  மட்டுமே  முடியும்  என்னால் ...
என்னால்  தடுக்க  முயலாமல்   போன   கோபத்தை ...
வெறுக்க  கூட  முடியமால்  போனேனே  நானும்


Wednesday, August 11, 2010

குப்பையே எனது வாழ்வானது......

வெட்டவெளி உலகத்தில்
என்னை கட்டி விட்டு போனாள்..
எதோ ஓர் தொட்டியில் என்னை  தட்டி விட்டு போனாள்

கண் விழித்து பார்த்தால்,
வெறும் குப்பையுடன் மக்கி
கைகளிடையே சிக்கி

கருத்து போன..
ஓர் சிகப்பு சட்டை மட்டும் என் முதல் உறவானது..

காக்கைகள் விரட்ட..
நாய்கள் நக்க..
உலகம் தெரிந்து கொண்டேன்..
 
ஆனால் பத்து  நாளிலேயே..
பாதகன் என் கண்ணை பறித்து கொண்டு..
என்னை வாடகைக்கு பிச்சை தந்தான்..
 பிச்சையெடுக்க பிச்சை தந்தான்..

அன்பில்லா மடியிலும்..
 தொட்டிலில்லா  கூவங்களிலும் ..
சிறுபருவம் கண்டு களித்தேன்..

என் தாயின் மீது வெறுப்பு கொண்டு .
உலகத்தின் மீது பொறுப்பு கொண்டு ..
பெண்ண்கள் ஒருவரின்றி கொன்றழித்தால்..
குப்பை தொட்டிகள் சுத்தமாகும் என்றெண்ணி..
வேட்டையில் வெறி கொண்டேன்..

வேட்டையின் நடுவில் ஒரு குரல் கேட்டு ..
படுத்தெழும் ஒருத்தியின் கதை கேட்டு..
என் வெறுப்பின் மீது வெறுப்புண்டேன்..

கருக பிறந்த பூக்களுக்கு மோட்சம் தேடி..
என்னையே நான் கருக்கிகொண்டேன்..
வினாகுகுளுக்கு எல்லாம் வினா எழுப்பி..
என்னையே ஓர் வினாவாகிநேன்..
ரத்தம் பார்த்த என் கைகளில்..
கத்தியை கொண்டெடுத்து என் மாருக்கு குறி வைத்தேன்..

குப்பை தொட்டியின் திரைக்கு சென்று ..
கத்தியை ஓங்கனேன்..
 சரக்கென்று பாயும் நேரும்
சுரீலென்று என்னை குத்தியது
ஒரு பிஞ்சு குரலின் அழுகை..
என் வெந்த மனதின் அழுகை..
கையில் எடுத்தேன் குழந்தையை...
தந்தையானேன் நோடியலே..

ஊர் விட்டு ஊர் சென்று..
பேரில்லாத எனக்கு பேர் வைத்து..
வீடொன்று வாடகை எடுத்து..
குப்பை எடுத்து அவனை படிக்கவைத்து.
என்னை அவனிடம் கற்று கொண்டேன்.
இறக்கும் நேரத்தில் வாழ்வு கொண்டேன்..